பாசுக்கி அஹோக்கின் மேல்முறையீடு நிராகரிப்பு

பாசுக்கி அஹோக்கின் மேல்முறையீடு நிராகரிப்பு

1 mins read

ஜகார்த்தா: சமய நிந்தனைக்காக முன்னள் ஜகார்த்தா ஆளுநர் பாசுக்கி அஹோக் என்பவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வட ஜகார்த்தா மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக அஹோக் மேல்முறையீடு செய் திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை இந்தோனீசியாவின் உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. "இந்த மேல்முறையீடு நிரா கரிக்கப்படுகிறது, இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள வாதங் களை ஏற்றுக்கொள்ள முடியாது," என்று உச்ச நீதிமன்றப் பேச்சா ளரான சுஹாடி கூறியதாக ஜகார்த்தா போஸ்ட் செய்தி கூறியது. எனினும், தங்களுக்கு இன்னும் அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் தெரிவிக்கப் படவில்லை என்று அஹோக்கின் வழக்கறிஞர் ஜோசஃபினா அகாத்தா சியூக்குர் தெரிவித்துள் ளார்.

"இது குறித்து நாங்கள் அறிக்கை எது-வும் தற்போதைய நிலையில் வெளியிடுவதாக இல்லை. முதலில் இது பற்றிய தகவல் பெற வேண்டியுள்ளது. அதன்பின் எங்கள் குழுவினர் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது," என்று விளக் கினார்.