கடும் புகையால் வடக்கு சீனாவின் தொழிற்சாலைகளை மூட வலியுறுத்து

கடும் புகையால் வடக்கு சீனாவின் தொழிற்சாலைகளை மூட வலியுறுத்து

1 mins read

ஷங்ஹாய்: சீனாவின் வடக்கு நகரங்களில் ஏற்பட்டுள்ள கடும் புகையால் அந்த வட்டாரத்தில் உள்ள 28 தொழிற்சாலைகளை மூடுவதற்கு சீன சுற்றுப்புற அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இந்த வாரம் ஏற்பட்ட கடும் புகையை அவசரகால முறையில் கையாளும்படி வடக்கு நகரங்களுக்கு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. அந்த வட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தியைக் குறைத்துக்கொள்வதும் பரிந்துரைகளில் ஒன்றாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.