பிரிட்டனின் அரச குடும்பத்தின் மெழுகுச் சிலைகளை பிரபல 'மேடம் டுசாட்ஸ்' அருங்காட்சியகம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய அம்சமாக அரச குடும்பம் வழக்கமாக நின்று பார்க்கும் மாடி முகப்பில் நிற்பது போலவே அந்தச் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அருங்காட்சியகத்திற்கு வந்து மாடி முகப்பில் நின்றுகொண்டிருக்கும் அரச குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வசதியை அருங்காட்சியகம் அமைத்துள்ளது. பிரிட்டனின் இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவி கெமிலா, பிரிட்டன் அரசி எலிசபெத் ராணி, இளவரசர் ஃபிலிப், கேம்பிரிட்ஜின் இளவரசர் வில்லியம், இளவரசி கேத்தரின் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. படம்: ராய்ட்டர்ஸ்
'மேடம் டுசாட்ஸ்' அருங்காட்சியகத்தில் அரச குடும்பத்தின் மெழுகுச் சிலைகள்
1 mins read
-

