புட்டின்: கவனக்குறைவே தீச்சம்பவத்திற்கு காரணம்

1 mins read
de242719-e2b7-4d6b-99ed-2852ed183c32
-

மாஸ்கோ: ரஷ்யாவின் கெம்ரோவோ நகரில் உள்ள ஒரு கடைத்தொகுதி யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீச்சம்பவத்தில் குழந்தை கள் உட்பட 64 பேர் மாண்டதை அடுத்து அந்தச் சம்பவத்திற்கு குற்றத்திற்கு ஈடான கவனக் குறைவே காரணம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நேற்று தெரிவித்துள்ளார். அந்தக் கடைத்தொகுதியின் பொது அறிவிப்பு அமைப்பை அங்கிருந்த பாதுகாவலர் செயல் இ ழ க் கவைத் தி ரு ந் த தா க வு ம் வெளியேறும் வழிகள் சட்டவிரோத மாக மூடப்பட்டிருந்ததாகவும் சம் பவத்திற்குப்பின் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு முறைகள் வெளிப் படையாக மீறப்பட்டிருந்ததாக ரஷ்ய அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பள்ளி விடுமுறைக்காலம் என்ப தால் கடைத்தொகுதியில் இருந்த திரையரங்கில் குழந்தைகள் பலர் கேலிச்சித்திரப் படம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் தீச் சம்பவம் ஏற்பட்டது. எச்சரிக்கை மணி அமைப்பு முறையும் அந்தக் கடைத்தொகுதி யில் செயலிழந்திருந்ததாகக் கூறப் படுகிறது. அவசரகால வெளிவாயில் களும் பூட்டப்பட்டிருந்ததாக விசா ரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஷ்ய கடைத்தொகுதியில் மூண்ட தீயில் மரணமுற்றவர்களுக்கு அஞ்சலி செலுத்த அங்கு அமைக்கப்பட்ட இடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார். படம்: ஏஎஃப்பி