வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் சீனா சென்றதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. வடகொரிய பிரதிநிதிகள் புடை சூழ, சிறப்பு ரயில் மூலம் கிம் பெய்ஜிங் சென்று திரும்பியதாக ஜப்பானிய ஊடகங் கள் கூறுகின்றன. உயர்மட்ட அளவிலான கூட்டங்கள் நடந்ததாக நம்பப்படும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது, போலிஸ் பாதுகாப்புடன் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றது, சீன அதிகாரிகள் மறுக்காதது ஆகியவை கிம்மின் வரு கையை உறுதிசெய்யும்படியாக இருந்தன. சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கு மரியாதை செய்வதற்காக கிம் வந்து சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
கிம் சீனா சென்றது உறுதியெனில், 2011ல் பதவிக்கு வந்தபிறகு இதுவே அவரது முதல் வெளிநாட்டுப் பயணமாக இருக்கும். வடகொரியா மேற்கொண்ட அணுவாயுத, ஏவுகணைச் சோதனைகள் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், அண்மையில் தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியா பங்கேற்றதை அடுத்து, அந்தப் பதற்றம் தணிந்து, அமைதிப் பேச்சுக்கான சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று வடகொரியா அறிவித்துள்ள நிலையில், கிம் பெய்ஜிங் சென்றுள்ளதாக 'புளூம்பெர்க்' செய்தி தெரிவித்தது.

