யங்கோன்: மியன்மாரின் நாடாளு மன்றம் அரசாங்க ஆலோசகரான ஆங் சான் சூச்சியின் மற்றொரு விசுவாசியைப் புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் முன்னாள் கீழவை நாயகரான 66 வயதான வின் மின்ட்டுக்கு 636ல் 403 வாக்குகள் கிடைத்தன. கடந்த புதன்கிழமை அன்று முன்னாள் அதிபரும் ஆங் சான் சூச்சியின் விசுவாசியுமான டின் கியாவ் உடல் நலக்குறைவு காரண மாக பதவி விலகினார். அதே நாளில் திரு வின் மின்ட்டின் தமது பொறுப்பிலிருந்து விலகி அதிபர் பதவியை ஏற்க முன் வந்தார்.
வின் மின்ட், ஆங் சான் சூச்சி (வலம்). படம்: ஏஎஃப்பி

