வாரம் $1,015 பரிசு

வாரம் $1,015 பரிசு

1 mins read
bb430265-0c67-4b1f-8752-18dd66347ba7
-

ஒட்டாவா: கனடா நாட்டைச் சேர்ந்த 18 வயது பெண்ணை அதிர்ஷ்டம் தழுவியுள்ளது. எஞ்சிய வாழ்நாள் முழுவதும் வாரம் ஆயிரம் வெள்ளியை இலவசமாகப் பெறும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். கியூ பெக்கைச் சேர்ந்த திருவாட்டி சார்லி லகார்டே 4 கனடிய டாலருக்கு லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கினார். இதற் கிடையே இம்மாதம் 14ஆம் தேதி அவர் தமது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந் தார்.

இந்த நிலையில் 'காக்னன்ட் ஏ வீ' என்ற அதிர்ஷ்டச் சீட்டை வாங்கிய அவருக்கு பிறந்த நாள் பரி சாக ஒரு மில்லியன் வெள்ளி கிடைத்துள்ளது. இந்தப் பணத்தை வரிக்கழிவுக்குப் பிறகு மொத்தமாகவோ அல்லது வரியில்லாமல் வாரத் திற்கு ஒரு முறை 1,000 கனடிய டாலராகவோ அவர் பெறலாம். நிதி ஆலோசகரின் அறிவுரைப்படி அவர் வாரத்தை தேர்வு செய்துள்ளார்.