பிரான்ஸ் கதாநாயகனுக்குப் பிரியாவிடை

பிரான்ஸ் கதாநாயகனுக்குப் பிரியாவிடை

1 mins read
9ce9ce88-af7a-4976-b6c9-efa8539bddeb
-

பாரிஸ்: தீவிரவாதிகளிடம் தன்னு யிரை ஒப்படைத்து உயிர்நீத்த பிரான்ஸ் நாட்டின் கதாநாய கனாகப் போற்றப்படும் போலிஸ் காரருக்கு நேற்று அதிபர் இம் மானுவேல் மெக்ரோன் முன் னிலையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை டிரெபிஸ் நகரில் நடந்த பயங்கர வாதத் தாக்குதலின்போது நான் காவது மற்றும் கடைசி நபராக லெப்டினெண்ட் கர்னல் அர்னாட் பெல்டிரேம், 44 பலியானார்.

"தன்னுயிரைப் பணயம் வைத்து பயங்கரவாதத் தாக்கு தலை அவர் முடிவுக்குக் கொண்டு வந்தார். உண்மையில் அவர் ஒரு கதாநாயகர்," என்று திரு மெக் ரோன் புகழாரம் சூட்டினார். பேரங்காடியில் 25 வயது துப் பாக்கிக்காரனிடம் பிணையாளியாக சிக்கியிருந்த பெண்ணுக்குப் பதிலாக திரு அர்னாட் பெல்டிரோம் தன்னை அர்ப்பணித்துக் கொண் டார்.