அணு ஆயுதக் களைவுக்கு வட கொரியா உறுதிபூண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் திடீரென்று சீனா சென்றுவந்த விவரத்தை சீனாவும் வடகொரியா வும் நேற்று உறுதிப்படுத்தின. அத் துடன் இந்த வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த சந்திப்பின்போது பெய்ஜிங்கில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம் வடகொரிய அதிபர் பேசிய விவரங்களை சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. கிம் கடந்த ஞாயிறுக்கிழமை முதல் புதன்கிழமை வரையில் சீனாவுக்கு அதிகாரபூர்வமற்ற பயணம் மேற்கொண்டிருந்ததாக அது குறிப்பிட்டது.
20-11ஆம் ஆண்டு தலைமைப் பதவிக்கு வந்த பின்னர் கிம் மேற் கொண்டிருக்கும் முதல் வெளி நாட்டுப் பயணமாக இது கருதப்படு கிறது. அமெரிக்காவுடனும் தென் கொரியாவுடனும் விரைவில் நடத்த விருக்கும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் பொருட்டு கிம் சீனா சென்றிருக்கலாம் என்று ஆய் வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெங்ஜிங்கில் உள்ள 'கிரேட் வால் ஆஃப் த பீப்பள்' அரங்கில் நடந்த சந்திப்பின்போது, அணு ஆயுதமற்ற கொரிய தீபகற்பத்தை ஏற்படுத்த தாம் கடப்பாடு கொண் டுள்ளதாக சீன அதிபரிடம் கிம் தெரிவித்ததாக சின்ஹுவா கூறி யது. "எங்களது முயற்சிகளை அமெ ரிக்காவும் தென்கொரியாவும் நல் லெண்ணத்துடன் ஒத்துழைத்தால் கொரிய தீபகற்பத்தில் அணுவாயு தம் களையப்படும்," என்று கிம் தெரிவித்ததாக அச்செய்தி நிறு வனம் குறிப்பிட்டது.
வடகொரிய தலைவர்கள் வெளி நாடுகளுக்கு தங்களின் துணைவி யாரை உடன் அழைத்துச் செல்வது வழக்கமல்ல. அந்த வழக்கத்திற்கு மாறாக கிம் தமது மனைவி ரி சோல் ஜுவுடன் சீனா சென்றார். சீன அதிபரும் அவரது துணைவி யார் பெங் லியுவானும் வடகொரிய அதிபர் தம்பதியினரை வரவேற்று விருந்தளித்தனர்.
(இடமிருந்து) வடகொரிய தலைர் கிம் ஜோங் உன்னின் மனைவி ரி சோல் ஜு, கிம் ஜோங் உன், சீன அதிபர் ஸி ஜின்பிங், அவரது மனைவி பெங் லியுவான். வடகொரிய தலைவர்கள் வெளிநாட்டுப் பயணத்திற்கு மனைவியை அழைத்துச் செல்வதில்லை என்னும் மரபை மீறி கிம் தமது மனைவியுடன் சீனா சென்றார். படம்: ராய்ட்டர்ஸ்

