தோக்கியோ: தாய்லாந்தின் பிரத மர்களாக பதவி வகித்த தக்சின் ஷினவத்ரவும் அவரது சகோதரி யிங்லக் ஷினவத்ரவும் ஜப்பான் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தாய்லாந்தைவிட்டு தப்பியோடி தற்போது சொந்த நாட்டிற்குத் திரும்பி போகமுடியாத நிலையில் உள்ளனர். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் ஜப்பானிற்கு வந்ததாக தெரியவந்துள்ளது. நாளை அவர் கள் சீனா செல்வார்கள் என்று அவர்களுக்கு நெருங்கிய தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் சீனா சென்ற அவர்கள் தற்போது இரண்டாவது முறையாக சீனா விற்குச் செல்கின்றனர்.
ஷினவத்ர சகோதர சகோதரி களின் அணுக்கமான நண்பரான ஜப்பானின் முன்னாள் அரசியல் வாதி ஹஜிமெ இஷியின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர்கள் இரு வரும் ஜப்பான் சென்றுள்ளனர். அந்த நூல் வெளியீட்டு விழா வில் தாய்லாந்தின் முன்னாள் பிர தமர்கள் இருவரும் மேடைக்கு அழைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப் பட்டனர். விழாவிற்கு வந்தவர்களுடன் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் செய்தியாளர்களிடம் பேச மறுத்து விட்டனர்.2018-03-31 06:00:00 +0800

