பேருந்து தீக்கிரை; 20 பேர் பலி

பேருந்து தீக்கிரை; 20 பேர் பலி

1 mins read
720221b0-27fa-4e50-b891-315739709d2b
-

பேங்காக்: தாய்லாந்தின் எல்லை நகரத்திலிருந்து தலைநகர் பேங் காக்கிற்கு சென்றுகொண்டிருந்த போது பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதிலிருந்த 20 பேர் மரணமடைந்தனர். இந்தச் சம்பவம் நேற்று அதி காலை 1.25 மணிக்கு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பேங்காக்கிற்குச் சென்று கொண்டிருந்த நான்கு பேருந்துக ளில் இந்தப் பேருந்தும் ஒன்று. தீப் பற்றியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று கூறப்பட்டது. தீப்பற்றிய பேருந்தில் நிறைய பேர் சிக்கிக்கொண்டு இருந்தது தொலைகாட்சி பதிவுகளில் தெரிய வந்துள்ளது. மொத்தம் 47 பேர் அந்தப் பேருந்தில் இருந்ததாக மீட்புப் பணியாளர் கிட்டிசாக் பூன்சான் கூறினார். இதுவரை 20 பேர் மரணமடைந்த தாகவும் மூவர் காயமுற்றுள்ளதாக வும் பேரிடர் தடுப்பு, சேத மட்டுப் படுத்துதல் மையத்தின் பேச்சாளர் பொல்லாவாட் சாப்சொங்சுக் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

தாய்லாந்தின் வடமேற்கு மாநில மான தாக் எனும் இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அது மியன் மார் நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ளது. தற்போது தாய்லாந்தில் உள்ள வெளிநாட்டு ஊழியர் அணியில் மிகப் பெரிய அளவில் மியன்மார் வாசிகள் உள்ளனர்.

தாய்லாந்தில் 47 பேரை ஏற்றிச்சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்ததில் மியன்மாரைச் சேர்ந்த 20 பேர் மரணமடைந்தனர். அவர்கள் தாய்லாந்திற்கு வேலை செய்ய வந்த ஊழியர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. படம்: ஏஎஃப்பி