துருக்கியில் சிற்றுந்து மோதிய விபத்தில் 17 குடியேறிகள் மரணம்

துருக்கியில் சிற்றுந்து மோதிய விபத்தில் 17 குடியேறிகள் மரணம்

1 mins read

இஸ்தான்புல்: ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வந்த குடியேறிகளை ஏற்றி வந்த சிற்றுந்து கட்டுப்பாட்டை இழந்து விளக்குக் கம்பத்தில் மோதியது. நேற்று நடந்த அந்தச் சம்பவத்தில் சிற்றுந்தில் இருந்த 17 பேர் மரணமடைந்தனர். துருக்கியின் வடக்குப் பகுதியான இக்டிர் நகரில் இந்த விபத்து ஏற்பட்டதாக துருக்கி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

14 பேரை மட்டும் ஏற்றிச் செல்லக்கூடிய அந்தச் சிற்றுந்தில் 50 பேர் இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. அந்தச் சிற்றுந்தை பின்தொடர்ந்து வந்த கனரக வாகனம் விபத்துக்குள்ளாகிய சிற்றுந்திலிருந்து வெளியே விழுந்தவர்கள் சிலர் மீது ஏறியதாகக் கூறப்படுகிறது. அந்த வாகனமும் குடியேறிகளை ஏற்றிவந்துள்ளது. அதிகளவில் குடியேறிகள் இக்டிர் மாநிலம் வழியாக செல்வதாகவும் இம்முறை விபத்து நடந்தது கவலை அளிப்பதாகவும் இக்டிர் மாநில ஆளுநர் என்வர் உன்லு கூறியுள்ளார்.