இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தலிபான் போராளிகளால் சுடப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்த மாணவி மலாலா யூசஃப்சாய், கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ஊருக்குச் சென் றிருக் கிறார். மலாலாவுக்கு தற்போது 20 வயதாகிறது. மலாலாவின் சொந்த ஊரான ஸ்வாட், முன்பு போராளிகளின் பிடியில் இருந்தது. தலிபான் போராளிகளின் அடக்குமுறைக்கு மத்தியில் பெண் கல்வி குறித்துப் பேசி வந்த மலாலா, அவரது 15ஆவது வயதில் பள்ளி பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது துப்பாக்கிக்காரன் ஒரு வனால் சுடப்பட்டார்.
2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்தச் சம்பவம் நடந்தது. அதற்குப் பின்னர் மலாலா முதன் முறையாக நேற்று தன் சொந்த ஊருக்குச் சென்றார். ஹெலிகாப்டர் மூலம் மலாலா அங்கு சென்றார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், மின்கொரா என்ற இடத்தில் உள்ள அவர் வாழ்ந்த வீட்டிற்கு அருகேயே ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது. அவரது தந்தை மற்றும் சகோதரருடன் சொந்த ஊரை சுற்றிப் பார்த்த அவர் தனது பள்ளிப்பருவ அனுபவங் களை நினைவு கூர்ந்ததாக தகவல்கள் கூறின.