கோலாலம்பூர்: மண்ணின் மைந்தர் கள் என்று அழைக்கப்டும் பூமிபுத்ராக்கள் நடத்தும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு 2.9 பில்லியன் ரிங்கிட் (S$980 மில்லியன்) மதிப்பிலான ஊக்கு விப்புத் திட்டங்களை மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று அறிவித்தார். பல்வேறு அமைப்புகள், திட்டங்கள், நிதி உதவி இவற்றின் மூலம் அந்த ஊக்குவிப்பு உதவித் தொகை விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார். தொழில் முனைவர்களுக்கு அரசாங்கத்தின் உதவி தேவைப் படுவதை தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்றும் திரு நஜிப் குறிப்பிட்டார். சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான 11 புதிய ஊக்குவிப்புத் திட்டங்களை அவர் அறிவித்தார். பூமிபுத்ரா தொழில் முனைவர் கள் ஒன்றுகூடிய நிகழ்ச்சியில் உரையாற்றியபோறு அவர் இவ்வாறு கூறினார். அந்த நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் கலந்துகொண்டனர்.
மண்ணின் மைந்தர்களின் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு
1 mins read

