ரஷ்யாவில் தீ விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகிய கிமிரோவோ ஆளுநர்

ரஷ்யாவில் தீ விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகிய கிமிரோவோ ஆளுநர்

1 mins read

பகுதியில் உள்ள ஒரு பேரங்காடியில் சென்ற மாதம் மூண்ட தீ விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி மாநில ஆளுநர் அமான் டுலியீவ் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அந்த விபத்தைத் தொடர்ந்து பதவி விலக தான் எடுத்த முடிவு சரியானதே என்று அவர் கூறினார். சென்ற மாதம் ஒரு பேரங்காடியில் மூண்ட தீயில் சிறுவர்கள் உட்பட 60க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்தப் பேரங்காடியில் பாதுகாப்பு விதிமுறைகள் பின் பற்றப்படவில்லை என்று கூறப் பட்டதையடுத்து பலர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தீ மூண்டபோது அந்த பேரங் காடியிலிருந்து மக்கள் வெளி யேற முடியவில்லை. வெளியேறு வதற்கான வழிகள் மூடப்பட்டிருந் தன. பாதுகாப்பு எச்சரிக்கை ஒலி எழுப்பும் சாதனம் பழுதாகியிருந் தது. தீ விபத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள பாதுகாவலர் கள் தங்கள் கடமையை மறந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓடி விட்டனர். தீ மூண்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மின்சார கோளாறு காரணமாக அங்கு தீ மூண்டிருக்கலாம் அல்லது சிறுவர்கள் விளையாடும் இடத்தில் யாரேனும் தீயை மூட்டியிருக்கலாம் என்று புலன் விசாரணையாளர்கள் கூறினர். மனிதத் தவறே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.