ரஷ்ய உளவாளியின் மகளை சந்திக்க விரும்புகிறது ரஷ்யா

ரஷ்ய உளவாளியின் மகளை சந்திக்க விரும்புகிறது ரஷ்யா

1 mins read

லண்டன்: முன்னாள் ரஷ்ய உளவாளியான செர்கெய் ஸ்கிரி பாலின் மகளான யூலியாவை மருத்துவமனைக்குச் சென்று பார்க்க விரும்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் வேண்டுகோளை பிரிட்டிஷ் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அனைத்துலக மற்றும் உள்நாட்டு சட்டத்தின் கீழ் பிரிட்டனின் கடமைகளுக்கு ஏற்ப ரஷ்யாவின் வேண்டுகோளைப் பரி சீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. யூலியா ஸ்கிரிபாலின் விருப்பம் மற்றும் உரிமை உட்பட பல்வேறு அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டு வரு வதாகத் தெரிகிறது. முன்னாள் ரஷ்ய உளவாளி ஸ்கிரிபாலும் அவரின் மகள் யூலியாவும் பிரிட்டனில் கடந்த மார்ச் 4ஆம் தேதி நச்சு வேதிப்பொருளால் தாக்கப்பட்டனர். அப்போதிலிருந்து அவ் விருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யூலியா குணமடைந்து வரும் வேளையில் அவரது தந்தை இன்னமும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனைத் தகவல்கள் கூறின.