இஸ்ரேல் தாக்குதல்: ஒரு பெண்ணைக் காப்பாற்றும் பாலஸ்தீனர்கள்

இஸ்ரேல் தாக்குதல்: ஒரு பெண்ணைக் காப்பாற்றும் பாலஸ்தீனர்கள்

1 mins read
8a84acfc-1e5f-4fc7-986d-0c7092d5cbf3
-

இஸ்ரேல்-காசா எல்லைப் பகுதிக்கு அருகே பாலஸ்தீனர்கள் கடந்த சில நாட்களாகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற பாலஸ்தீனர்கள் தங்கள் கைகளை கோர்த்துக்கொண்டு அப்பெண்ணுக்கு பாதுகாப்பு அளித்தபடி அங்கிருந்து தப்பியோடுகின்றனர். காசா பகுதியில் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வலுக்கக்கூடும் என்று அஞ்சப்படும் வேளையில் அவசரமாகக் கூடிய ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டம் எவ்வித உடன்பாடும் காணாமலேயே முடிவுற்றதாக நியூயார்க் தகவல்கள் கூறின. படம்: ஏஎஃப்பி