தென்கொரிய இசைக் குழுவின் நிகழ்ச்சியை ரசித்த கிம்

1 mins read
317cea9e-d8ac-48e3-a954-ae9c83b3025d
-

பல ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியாவுக்கு வந்துள்ள தென்கொரிய பாப் இசைக் கலைஞர்களை வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் சந்தித்துப் பேசினார். தென்கொரிய இசைக் குழுவினர் படைத்த இசை நிகழ்ச்சியை திரு கிம் கண்டு ரசித்தார். அவருடன் அவர் மனைவியும் வந்திருந்தார். தென்கொரிய இசைக்குழுவினர் படைத்த இசை நிகழ்ச்சியில் வடகொரியத் தலைவர் ஒருவர் கலந்துகொண்டிருப்பது இதுவே முதல் தடவை. நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி அமைந்திருந்ததாக திரு கிம் கூறினார். இரு கொரியாக்களின் தலைவர்கள் இம்மாத இறுதியில் சந்தித்துப் பேசவுள்ளனர். படம்: ஏஎஃப்பி