அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா 25 % வரை வரி விதிப்பு

அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா 25 % வரை வரி விதிப்பு

1 mins read

பெய்ஜிங்: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 128 பொருட்களுக்கு 25 விழுக்காடு வரை சீனா வரி விதித்துள்ளது. இதில் பன்றி இறைச்சி, ஒயின் ஆகியவை அடங்கும். இந்த வரி விதிப்பு திங்கட்கிழமை முதல் நடை முறைக்கு வருவதாக சீனா அறிவித்தது. புதிய வரி விதிப்பு சுமார் மூன்று பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிப் பொருட் களைப் பாதிக்கும். அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகளால் ஏற்படும் இழப்பு களைச் சரிசெய்வதற்கும் சீனா வின் நலன்களைப் பாதுகாப் பதற்கும் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக சீனா தெரி வித்துள்ளது. முன்னதாக அமெரிக்காவுடன் வர்த்தகப் போரை விரும்பவில்லை என்று சீனா தெரிவித்திருந்த போதிலும் அதன் பொருளியல் பாதிக்கப்படு மெனில் நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்திருந்தது. கடந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளிநாடு களிலிருந்து இறக்குமதி ஆகும் எஃகு மற்றும் அலுமினியம் ஆகிய வற்றுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியதைத் தொடர்ந்து சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள் ளது.