'படகில் வந்த ரோஹிங்ய அகதிகள் மலேசியாவுக்குள் அனுமதிக்கப்படுவர்' ரோஹிங்ய அகதிகள் பலர் படகு மூலம் நேற்று மலேசியா வந்தடைந் தனர். அடைக்கலம் தேடி வந்துள்ள இந்த முஸ்லிம் சிறுபான்மையினர் மலேசியாவுக்குள் அனுமதிக்கப் படுவர் என்று மலேசிய அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ 56 அகதிகள் பயணம் செய்த அந்தப் படகை மலேசியக் கடற்துறை அதிகாரிகள் மலேசியாவின் வடமேற்குப் பகுதி யில் உள்ள லங்காவி தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் இடைமறித்தனர். இந்தத் தகவலை மலேசியக் கடற்படைத் தலைவர் அகமது கமரூல்ஸாமான் படாருதீன் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். மியன்மாரில் தங்களுக்கு எதிராக வெடித்துள்ள வன்முறை யிலிருந்து ஆயிரக்கணக்கான ரோஹிங்ய மக்கள் பிற நாடு களுக்குத் தப்பிச் செல்கின்றனர். அவர்களுக்காக அமைக்கப் பட்டுள்ள முகாம்களில் கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு அகதிகள் பலர் நிரம்பி உள்ளனர்.
அகதிகள் முகாம்களில் ஏற்கெனவே சமாளிக்க முடியாத அளவுக்கு அகதிகள் இருக்கையில் தொடர்ந்து பல அகதிகள் வருவதால் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மியன்மாரில் ரோஹிங்ய மக்களுக்கு எதிராக வன்முறை வெடித்ததை அடுத்து ஏறத்தாழ 70,000 பேர் பங்ளாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில், படகு மூலம் ரோஹிங்ய அகதிகள் மலேசியா வந்தடைந்தனர். "படகில் இருந்த 56 அகதி களும் பாதுகாப்பாக இருக் கின்றனர். அவர்களில் பெரும் பாலானோர் பெண்கள், குழந்தை கள். அவர்கள் அனைவரும் மிகவும் களைப்புடனும் பசியுடனும் உள்ளனர். படகையும் அதில் உள்ள அகதிகளையும் மலேசியக் குடிநுழைவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுவோம்," என்று மலேசியக் கடற்படைத் தலைவர் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையிலி ருந்து மலேசியா அதன் கடலோரக் காவல் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளதாக அந்நாட்டின் வடக்கு வட்டாரக் கடற்துறை உயர் அதிகாரி ரொசாலி முகம்மது சஹாட் தெரிவித்தார். அகதிகளை ஏற்றிச் செல்லும் படகுகளைக் கண்டுபிடிக்க இரண்டு கப்பல்களையும் நான்கு படகுகளையும் அனுப்பி இருப்பதாக அவர் கூறினார். கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று மலேசியா நோக்கிப் புறப்பட்ட ரோஹிங்ய அகதிகளின் படகு தாய்லாந்தின் கோ லன்டா தீவில் சிறிது நேரம் நின்றது. அதில் இருந்தவர்களிடம் தாய் லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு பயணத்தைத் தொடர அனுமதித்தனர். அகதி களுக்கு தாய்லாந்து கிராமவாசிகள் உணவும் இதர பொருட்களும் தந்து உதவினர். அந்தப் படகுதான் நேற்று மலேசியா வந்தடைந்ததா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.

