தாய்லாந்தில் 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

தாய்லாந்தில் 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

1 mins read
9b91a76d-f062-4eb5-bef9-fb06504d9a73
-

பேங்காக்: தாய்லாந்துப் போலிசார் 700 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் 700 மில்லின் பாட் (S$29.3 மில்லியன்) மதிப்புள்ள ஐஸ் போதைப் பொருளை போலி சார் மார்ச் 28ஆம் தேதி பறிமுதல் செய்தனர். தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு மாநிலத்தில் அந்த போதைப்பொருள் கைப்பற்றப் பட்டதாக போலிசார் கூறினர். தாய்லாந்து, மியன்மார், லாவோஸ் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் முக்கோணப் பகுதியில் அந்த போதைப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த போதைப்பொருள் தொடர்பில் தாய்லாந்து நாட்டவர்கள் இருவர் மற்றும் இரு மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிசார் கூறினர். கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இத்தகைய போதைப் பொருள் விற்பனை அதிகரித்து வருவது குறித்து ஐநா ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

மார்ச் 25ஆம் தேதிக்கும் ஏப்ரல் முதல் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தாய்லாந்து போலிசார் பறிமுதல் செய்த போதைப்பொருட்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. படம்: ராய்ட்டர்ஸ்