பிரான்சில் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பிரான்சில் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்

1 mins read
574fdea5-1065-47a2-8b0b-79873adc113d
-

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் ரயில்வே துறை ஊழியர்கள் மூன்று மாத கால தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். பிரெஞ்சு அதிபர் இம்மானுவெல் மெக்ரோன் அறிவித்துள்ள ரயில்வே ஊழியர்களுக்கான சீர்திருத்தத் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் இந்தப் போராட்டத்தைத் தொடங்கி யுள்ளனர். நேற்று தொடங்கி, ஐந்து நாட்களுக்கு ஒரு முறை இரண்டு நாட்கள் என்ற ரீதியில் ஜூன் மாதம் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று பிரெஞ்சு ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. பிரான்சை மாற்றியமைக்கும் மிகப்பெரும் மறுசீரமைப்புத் திட்டத்தில் விருப்ப ஓய்வு, நிரந்தர வேலை போன்ற சலுகைகளை குறைக்கப்போவதாக மெக்ரோன் அறிவித்துள்ளார்.

வேலை நிறுத்தம் தொடங்கிய நாளன்று பாரிஸில் உள்ள ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைத் தாண்ட முயன்ற ஒரு மாது தவறி விழுந்தார். அவருக்கு அங்கிருந்தவர்கள் உதவுகின்றனர். படம்: ஏஎஃப்பி