சான் டியகோ: கலிபோர்னியாவில் உள்ள யுடியூப் தலைமை அலுவ லகத்தில் நுழைந்து துப்பாக்கியால் சுட்ட பெண் சந்தேக நபருக்கு காணொளிப் பதிவுகளில் கிடைக்க வேண்டிய வருமானம் குறைந்ததால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படு கிறது. சந்தேக நபர், 39 வயது நசிம் அக்டாம் என்றும் அவரது நோக்கம் குறித்து இன்னமும் விசாரிக்கப் பட்டு வருகிறது என்றும் போலிசார் தெரிவித்தனர். யுடியூப் இணையத்தளத்தில் பல காணொளிப் படங்களை அவர் பதிவேற்றியிருந்தார்.
ஆனால் அதன் மூலம் அவர் எதிர்பார்த்த வருமானம் கிடைக்க வில்லை. யுடியூப் அவரது காணொளிப் பதிவுகளை வடிகட்டு வதாகவும் நம்பினார். இதனால் ஆத்திரமடைந்த அவர், யுடியூப் அலுவலகத்தில் நுழைந்து துப்பாக்கியால் சுட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன. செவ்வாய்க்கிழமை அன்று யுடியூப் அலுவலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் காயம் அடைந்தனர். பின்னர் நசிம் அக்டாம் தம்மைத்தானே சுட்டுக் கொண்டு மாண்டார். துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களுக்குச் சந்தேக நபரை முன்பே தெரியுமா என்பது தெரியவில்லை என்று கூறிய சான் புருனோ போலிசார், காயமடைந்த 39 வயது ஆடவர் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப் பதாகத் தெரிவித்தனர்.

