சான் டியகோ: ஃபேஸ்புக்கின் தகவல்கள் முறைகேடாகப் பயன் படுத்தப்பட்ட விவகாரத்தில் அந் நிறுவனம் நேற்று அதிரடியாக பல கணக்கு களை நீக்கியது. அதன்படி ரஷ்யாவின் 'டிரோல் ஃபேக்டிரி' உடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள தாக அது தெரிவித்தது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது போலி சமூக அமைப்பான 'டிரோல் ஃபேக்டிரி'தான் தேர்தல் முடிவு களை மாற்றக்கூடிய அரசியல் கருத்துகளை வெளியிட்டிருந்தது என்று அமெரிக்க அரசு வழக் கறிஞர்கள் குற்றம் சாட்டியிருந் தனர்.
ரஷ்யாவைத் தளமாகக் கொண்ட மத்திய செய்தி நிறு வனத்துடன் தொடர்புடைய பல பக்கங்களும் கருத்துகளும் நீக்கப் பட்டதாக நேற்று ஃபேஸ்புக் அதி காரபூர்வமாக அறிவித்தது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத் துக்கு அளித்த தனிப்பட்ட பேட்டி யில் மக்களை ஏமாற்றி தில்லுமுல்லு செய்பவர்கள் ஃபேஸ்புக்கில் எந்த இடத்திலும் இருக்க விரும்ப வில்லை என்று ஃபேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் குறிப்பிட்டார். உலகின் ஆகப்பெரிய சமூக ஊடகமான ஃபேஸ்புக்கிலிருந்து 50 மில்லியன் பயனீட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதால் அந் நிறுவனம் முன் எப்போதும் இல் லாத நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

