மலேசிய 'ரெண்டாங்'; ஒன்றுபட்ட நஜிப், மகாதீர்

மலேசிய 'ரெண்டாங்'; ஒன்றுபட்ட நஜிப், மகாதீர்

1 mins read
3adeebf6-dee1-4a68-b2d9-87c4e30934b1
-

அரசியல் களத்தில் எதிரிகளாக இருந்தாலும் மலேசிய 'ரெண்டாங்' விவகாரத்தில் பிரதமர் நஜிப்பும் எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் மகாதீரும் ஒற்றுமையுடன் குரல் கொடுத்துள்ளனர். 'மலேசிய ரெண்டாங்" விளை யாட்டல்ல என்பதுபோல் அவர்க ளுடைய எச்சரிக்கை வெளியாகி யுள்ளது. தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சி ஒன்றில் மலேசிய சமையல் நிபுணர் ஸாலேஹா காதிர் உல்ஃபின் தயாரித்த 'நாசி லெமா கோழி ரெண்டாங்' உண வில் கோழி மொருமொருவென இல்லை எனக் கூறி அவரைப் போட்டியிலிருந்து நடுவர் விலக்கி விட்டார்.

இதனால் நாடு முழுவதும் மலேசியர்கள் அதிர்ச்சியடைந்த னர். 'கோழி ரெண்டாங்' எப்படி மொருமொருவென இருக்கும் என்று மலேசியர்கள் கொதித் தெழுந்துள்ளனர். மலேசியாவுக்கான பிரிட்டிஷ் தூதரான விக்கி டிரெடலும், "கோழி ரெண்டாங்' எப்போதுமே மொருமொருவென இருந்ததில்லை என்று டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். தேங்காய் பால், மசாலா போன்ற வற்றுடன் சமைக்கப்படும் 'கோழி ரெண்டாங்' மிருதுவாக இருப்பதே வழக்கம்.