இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கவுக்கு எதிராக நேற்று அந் நாட்டு நாடாளுமன்றத்தில் நம் பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தின்மீது நேற்று உறுப்பினர்கள் விவாதித் தனர். நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர பேசுகையில் இத்தீர்மானம் எதிர்க் கட்சிகளின் சதித் திட்டம் என் றார். அடுத்தாண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்குள் பிர தமர் ரணிலை பதவியில் இருந்து அகற்றிவிட எதிர்க்கட்சிகள் துடிப்பதாக அவர் நாடாளுமன்ற விவாதத்தின்போது சொன்னார்.
தற்போது 68 வயதாகும் பிர தமர் ரணில் மீது நிதி முறை கேட்டுப் புகார்களை எதிர்க்கட்சி யினர் கூறி வருகின்றனர். மேலும் கடந்த மாதம் கண்டி மாவட்டத்தில் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதி ரான கலவரத்தை ஒடுக்கத் தவறி யதாகவும் அவர் குறைகூறப்பட்டு வருகிறார்.

