வலுவடைகிறது வர்த்தகப் பதற்றம்

வலுவடைகிறது வர்த்தகப் பதற்றம்

1 mins read
a9d0b819-de37-4731-99c9-a56f53ca8f4b
-

சீன இறக்குமதிப் பொருட்களுக்கு புதிதாக வரி விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்த சில மணி நேரங்களில் சீனா அதற்குப் பதிலடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகும் சீனப் பொருட்களுக்கு வரி விதிக்கத் தீர்மானித்து அதற்கான பட்டியலை அமெரிக்கா வெளியிட்டது. கடந்த ஆண்டின் மதிப்புப்படி 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1,300 பொருட்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றன. தொலைக்காட்சிப் பெட்டிகள், மிதிவண்டிகள் உள்ளிட்ட பொருட்கள் அவற்றுள் அடங்கும். மேலும், அப்பட்டியலில் உள்ள பெரும்பாலான பொருட்கள் தொழில்துறை, போக்குவரத்து, மருத்துவம் சார்ந்தவை.

அவற்றுக்கு 25 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் எனினும் அது தொடர் பான இ-றுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது. "சீனாவில் தயாராகி இறக்குமதியாகும் பொருட்கள் அமெரிக்கப் பொருளியலில் ஏற்படுத் தும் தாக்கத்தைக் குறைக்கவே இந்த வரி விதிப்பு யோசனை," என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் லைதைசர் அறிக்கை ஒன்றில் விளக்கினார். அண்மையில் பன்றி இறைச்சி, ஒயின், பழங்கள் போன்ற 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமெரிக்கத் தயாரிப்புகளுக்கு தீர்வை விதிக்கப்போவதாக சீனா அறிவித்த தற்குப் பதில் நடவடிக்கையாக அமெரிக்க இந்த 1,300 பொருட்களின் பட்டியலை வெளியிட் டதாகச் சொல்லப்பட்டது.