தேர்தல் நெருங்கும் நேரத்தில் மலேசியாவில் பல சலுகைகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மலேசியாவில் பல சலுகைகள்

1 mins read
c03ece68-99e6-4948-b746-8f256909020d
-

மலேசிய அரசாங்க ஊழியர்களுக்கு 1.46 பில்லியன் ரிங்கிட் ($494.31 மில்லியன்) மதிப்பிலான கூடுதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று பிரதமர் நஜிப் ரசாக் உறுதி தெரிவித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பு செய் யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் குறிப் பிடுகின்றன. மலேசியாவில் உள்ள 1.6 மில்லி யன் அரசாங்க சேவை ஊழியர்க ளுள் பெரும்பாலானவர்கள் மலாய் இனத்தவர். மேலும் அவர்களில் பெரும்பான் மையினர் ஆளும் தேசிய முன்ன ணியின் ஆதரவாளர்கள்.

வாழ்க்கைச் செலவினம் அதி கரித்து வருவது அரசாங்க ஊழி யர்களிடையே கவலையை ஏற் படுத்தி வருகிறது. இந்நிலையில் அவர்களின் சிரமங்களைப் போக்க முயற்சி எடுக்காவிட்டால் அந்த வாக்குகள் ஆளும் கூட்டணிக்கு எதிராகப் போய்விட வாய்ப்பு உள் ளதாக கூட்டணியின் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியதாகத் தெரிகிறது. ஆளும் கூட்டணி வெற்றிக்குப் பெரிய வாக்கு வங்கியாக அர சாங்க ஊழியர்கள் திகழ்கின்றனர்.

புத்ரா ஜெயா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் மலேசிய அரசாங்கச் சேவை ஊழியர்களின் 16ஆம் ஆண்டு ஒன்றுகூடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் நஜிப் ரசாக், துணைப் பிரதமர் அஹமத் ஸாஹித் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள். படம்: ஊடகம்