தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை

தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை

1 mins read
5bb99eae-87a7-4990-9ccc-80ccd4bb63cc
-

சோல்: ஊழல் விவகாரத்தில் சிக்கிய தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹைக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தியது, நெருங்கிய தோழியுடன் சேர்ந்து ஊழல் விவகாரத்தில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் திருமதி பார்க் குற்றவாளியென நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அத்துடன் அவர் 18 பில்லியன் வோன் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் நேற்று தீர்ப்பை அறிவித்தபோது பார்க், நீதி மன்றத்திற்கு வர வில்லை. முன்பு நடந்த விசாரணை களையும் அவர் புறக்கணித்தார். தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று பார்க் அவர் கூறி வந்துள்ளார். இந்நிலையில் அவரை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்திற்கு வெளியே அவரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹைக்கு ஊழல் விவகாரம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் 24 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில் அவரை விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி