சீனாவுக்கு கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் மிரட்டல்

சீனாவுக்கு கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் மிரட்டல்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் நீடிக்கும் வேளையில் சீனாவுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 பில்லியன் டாலர் வரி விதிப்பது குறித்து பரிசீலிக்கு மாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு திரு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு 50 பில்லியன் டாலர் வரை வரி விதிக்க அமெரிக்கா ஏற்கெனவே உத்தே சித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் எஃகு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரி விதித்தது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்காவில் இருந்து இறக்கு மதியாகும் பன்றி இறைச்சி, மது வகைகள், சோயா பீன்ஸ், ஆரஞ்சு ஜூஸ், விமான உதிரிப்பாகங்கள் உட்பட 106 பொருட்களுக்கு சீனா கூடுதலாக வரி விதித்தது.