பேருந்து -= லாரி மோதல்; கனடா ஹாக்கி வீரர்கள் 14 பேர் பலி

பேருந்து -= லாரி மோதல்; கனடா ஹாக்கி வீரர்கள் 14 பேர் பலி

2 mins read
Google News Preferred Icon

ஒட்டாவா: கனடாவில் ஜூனியர் ஹாக்கி விளையாட்டு வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து லாரிமீது மோதிய விபத்தில் 14 பேர் மரண மடைந்தனர். சஸ்கட்செவான் எனும் புறநகர் பகுதியில் விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. மேலும் 14 பேர் காயமடைந்துள்ள தாகவும் அவர்களில் மூவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வும் கனடா ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. 'ஹம்போல்ட் புரொன்கொஸ்' எனும் ஹாக்கி அணியின் பேருந்து நாட்டின் வடக்குப் பகுதியில் சஸ்கட்செவான் ஜூனியர் ஹாக்கி லீக் 'பிளேஆஃப்' விளையாட்டு களுக்காகச் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. 'நிபாவின் ஹாக்ஸ்' எனும் அணிக்கு எதிரான ஆட்டம் நடக்கவிருந்ததாக 'குளோபல் அண்ட் மெயில்' செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

நேற்று முன்தினம் இந்த விபத்து நடந்துள்ளதாக ராயல் கனடா போலிஸ் தெரிவித்துள்ளது. ரெஜினா எனும் நகருக்கு 300 கிலோமீட்டர் வடக்கிலுள்ள டிஸ்டேல் எனும் பகுதியில் நடந்த இச்சம்பவத்தால் விபத்துக்குள்ளா னோர் ஹெலிகாப்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக் குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஹாக்கி அணி பிறகு வெளியிட்ட அறிக்கையில் இது கொடூரமான பேரிடர் என்று விபத்து குறித்து கூறியது. இந்தப் பெரிய இழப்பை நினைத் துப்பார்க்கவே முடியவில்லை என்று அணியின் தலைவர் கெவின் கரிங்கர் தமது அறிக்கை யில் தெரிவித்துள்ளார். 'புரொன்கொஸ்' குடும்பமே அதிர்ச்சியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடொ தமது கருத்துகளை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். " வி ப த் து க் கு ள் ளா னோ ரி ன் பெற்றோர்கள் எப்படி தாங்கிக் கொள்வார்கள் என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை. இந்தப் பயங்கர பேரிடரால் பாதிக்கப்பட்ட 'ஹம்போல்ட்' சமூகத்தினருக்கும் மற்ற அனைவருக்கும் இந்தத் தருணத்தில் இரங்கலைத் தெரி வித்துக்கொள்கிறேன்," என்று திரு ட்ரூடொ தனது இரங்கல் செய்தியில் கூறினார்.