ஜென்டிங் ஹைலண்ட்ஸில் பேருந்து விபத்து

1 mins read

பென்தொங்: ஜென்டிங் ஹைலண்ட்ஸ் மலையிலிருந்து கீழே இறங்கிவந்த பேருந்து கார் ஒன்றுடன் மோதிய விபத்தில் 16 சீன சுற்றுப்பயணிகள் உட்பட 23 பேர் காயமுற்றனர். நேற்று முன்தினம் இரவு 7.24 மணிக்கு இந்த விபத்து நடந்த தாக ஜென்டிங் ஹைலண்ட்ஸ் தீயணைப்பு, மீட்புத் துறைத் தலை வர் யுஸ்ரி அப்துல்லா சானி தெரி வித்துள்ளார். பேருந்து கட்டுப்பாட்டை இழந்து காருடன் மோதி பின்னர் சாலைத் தடுப்பில் மோதி நின்றது. காயமுற்றவர்கள் செலயாங் மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக கொண்டுசெல்லப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவ தாகத் தெரிவிக்கப்பட்டது.