ஜோகூர்: எதிர்க்கட்சிக் கூட்டணி யின் தலைவராகக் கருதப்படும் மலேசிய முன்னாள் பிரதமரின் அரசியல் கட்சிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் பக்கத்தான் ஹரப்பான் கூட்ட ணியைத் தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பதாலும் அனைத்து எதிர்க் கட்சியினரும் அன்வார் இப்ராகி மின் பார்டி கெஅடிலான் ராக்யாட் கட்சியின் சின்னத்தில் போட்டியிடு வார்கள் என்று திரு மகாதீர் கூறி உள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று மலேசிய பிரதமர் அறிவித்த உடனே எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஜோகூரில் நடந்த பேரணியில் முனைப்புடன் கலந்துகொண்டனர். சுமார் 3,500 பேர் கலந்து கொண்ட பேரணியில் 'நாட்டில் மாற்றம் தேவை' என்று முழக்க மிட்டு தலைவர்கள் பேசினர். இதற்கிடையில், நேற்றிரவு தேசிய முன்னணி அதன் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள் ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தேசிய முன்னணியின் தேர்தல் வாக்குறுதி களை மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் வெளியிட்டார். 'சிறப்பான மலேசியாவை உருவாக்குவோம்' என்ற கருப்பொருளில் மலேசியாவின் 14வது பொதுத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. படம்: தி ஸ்டார்

