கோலாலம்பூர்: மலேசியாவில் ஒருவர் தேசிய முன்னணியின் கொடிகளை கீழே தூக்கி வீசிய காணொளி, சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து அந்த நபரை போலிசார் தேடி வருகின்றனர். அந்தச் சம்பவம் தொடர்பில் போலிசாருக்கு மூன்று புகார்கள் வந்திருப்பதாக போலிஸ் படைத் தலைவர் மஸ்லான் லாஷிம் சொன்னார். அந்தக் கொடிகளை அகற்றிய நபரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலிசாருடன் தொடர்பு கொண்டு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
தேசிய முன்னணி கொடிகளை வீசியவருக்கு வலைவீச்சு
1 mins read

