டாக்கா: பங்ளாதேஷில் பல்கலைக் கழக மாணவர்கள் அரசாங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அவர்களை போலிசார் கலைக்க முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அந்த மோதலில் குறைந்தது 100 பேர் காயம் அடைந்ததாக டாக்கா தகவல்கள் கூறின. அரசாங்கம் ஒதுக்கியுள்ள வேலை இடங்கள் ஒரு சில குழுவினருக்கு ஆதரவாக உள்ளது என்று கூறி பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். டாக்காவில் நடந்த மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களில் இது வும் ஒன்று எனக் கூறப்பட்டது.
ஆர்ப் பாட்டக்காரர்களைக் கலைக்க போலிசார் ரப்பர் தோட் டாக்களையும் கண்ணீர் புகைக் குண்டுகளையும் பயன் படுத்திய தாக மாணவர்கள் கூறினர்.
பதிலுக்கு மாணவர்கள், போலிசார் மீது கற்களை வீசித் தாக்கியதாகத் தெரிகிறது. அமைச்சர் ஒருவர், ஆர்ப் பாட்டத் தலைவர்களை சந்தித்துப் பேசவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1,000 மாணவர்கள் கலந்துகொண்டதாகக் கூறப் படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய ஆர்ப்பாட்டம் நேற்று வரை நீடித்ததாகக் கூறப்பட்டது.
டாக்காவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. படம்: ஏஎஃப்பி

