65,000 ஃபேஸ்புக் பயனீட்டாளர்களுக்கு விழிப்பூட்டும் அறிவிப்பு

65,000 ஃபேஸ்புக் பயனீட்டாளர்களுக்கு விழிப்பூட்டும் அறிவிப்பு

1 mins read

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 65,000 பயனீட்டாளர்கள் உட்பட 87 மில்லியன் பேரின் தகவல்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதைப் பயனீட்டாளர்களுக்குத் தெரிவிக்கும் நடவடிக்கையில் ஃபேஸ்புக் இறங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பயனீட்டாளரின் ஃபேஸ்புக் பக்கத்தில் 'என்ன நடந்தது, எப்படி பயனீட்டாளர் பாதிக்கப்பட்டனர்' போன்ற விளக்கங்களுடன் அறிவிப்பு இடம்பெறும். இன்று முதல் அறிவிப்பு வெளியாகும் என்று டெக்நியூஸ் இணையத்தளத்திடம் ஃபேஸ்புக் கூறியது. இந்த அறிவிப்பு மூலம் தகவல் திருட்டால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பயனீட்டாளர்கள் அறிய முடியும்.