தாய்லாந்தில் குண்டு வெடிப்பு; நான்கு பேர் காயம்

தாய்லாந்தில் குண்டு வெடிப்பு; நான்கு பேர் காயம்

1 mins read

பேங்காக்: தெற்கு தாய்லாந்தில் குண்டு வெடித்ததில் குறைந்தது நான்கு பேர் காயம் அடைந்தனர் என்று பேங்காக் போஸ்ட் தெரிவித்தது. நாராதிவாட் மாவட்டத்தில் சுங்கை கோலோக்கில் குறைந்தது மூன்று குண்டுகள் வெவ்வேறு இடங்களில் வெடித்ததாகவும் அந்த நாளேடு கூறியது. பிளாசா ஓட்டலுக்கு அருகே முதல் குண்டும் பிராச்சா விவாட் ரோட்டில் இரண்டு குண்டுகளும் வெடித்தன என்று காவல்துறையினர் கூறியதாக பேங்காக் போஸ்ட் குறிப்பிட்டது.