தோக்கியோ: உலகிலேயே ஆக வய தான முதியவராக ஜப்பானைச் சேர்ந்த மசசோ நோனாகா அங்கீகரிக்கப் பட்டுள்ளார். அவருக்கு வயது 112. அவரது நீண்ட ஆயுளின் ரகசியம் இனிப்பும் வெந்நீர் குளியலும் என்று குடும்பத் தினர் கூறுகின்றனர். நோனாகா, 1905 ஜூலை 25ஆம் தேதி பிறந்தவர். ஹோக்காய்டோ தீவில் வசிக்கும் அவரிடம் கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. வெந்நீர் குளியல் விடுதி நடத்தி வரும் குடும்பத்தினருடன் நோனாகா வசித்து வருகிறார். சக்கர நாற்காலியில் அவர் பயணம் செய்தாலும் நல்ல உடல் நிலையில் இருப்பதாக அவரது பேத்தி யூகோ நோனாகா கூறியுள்ளார்.
ஜப்பானிய, மேற்கத்திய பாணி இனிப்பு வகைகளை அவர் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார். நாள்தோறும் செய்தித்தாளை அவர் படித்து வரு கிறார். வெந்நீர் குளியல் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர் தெரிவித்தார். 1931ல் ஹட்சுனோ என்பவரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருப்பதாக கின் னஸ் சாதனைப் புத்தகம் தெரிவிக் கிறது.
ஜப்பானில் வசிக்கும் மசசோ நோனாகாவை உலகிலேயே ஆக வயதான முதியவர் என உலக கின்னஸ் சாதனை அங்கீகரித்துள்ளது.

