ஸி: மோதல் வேண்டாம், பேசித் தீர்க்கலாம்

ஸி: மோதல் வேண்டாம், பேசித் தீர்க்கலாம்

1 mins read
07fa3d64-bffe-48d3-b191-11abdc31ddda
-

போஆவ், சீனா: சீனாவும் அமெரிக் காவும் பதிலுக்குப் பதில் ஒன்று மற்றதன் பொருட்களுக்கு வரி விதித்து வரும் வேளையில் மோதல் போக்கை கைவிட்டு பேசித் தீர்க்கலாம் என சீன அதிபர் ஸி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்புக்கும் அவரது வர்த்த கக் கட்டுப்பாடுகளுக்கும் மாற்று வழியாக அதிபர் ஸி பேச்சு வார்த் தையை முன் வைத்துள்ளார். அமெரிக்கா-சீனா வர்த்தகப் பூசல் விவகாரத்தில் முதல் முறை யாக திரு ஸி வெளிப்படையாகப் பேசினார். அமெரிக்காவுடனான வர்த்தகப் பூசலை மட்டுப்படுத்தும் வகையில் அவரது பேச்சு அமைந்தது.

போஆவ்வில் நடைபெற்ற ஆசியாவுக்கான கருத்தரங்கில் அவர் உரையாற்றினார். "பனிப்போர் மனப்போக்கும் மற்றவரின் நட்டத்தில் லாபமடைய லாம் என்ற எண்ணமும் பழமை யானது," என்று கூறிய சீன அதிபர், "அமைதியான வளர்ச்சியும் சேர்ந்து செயல்படுவதிலும்தான் பலன் உள்ளது," என்றார். உலக வர்த்தகங்களுக்கு எதி ரான தடைகள் முறியடிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், சீனா தனது கதவை மூடுவதற்குப் பதில் மேலும் அகலமாகத் திறந்துவிடும் என்று கூறினார். சீனாவில் எந்தெந்த துறை களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப் படும் என்பதையும் அதிபர் ஸி கோடிகாட்டினார்.