சிரியாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை: டிரம்ப் திட்டம்

சிரியாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை: டிரம்ப் திட்டம்

1 mins read

வா‌ஷிங்டன்: சிரியா விவகாரத்தில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத் தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் சிரியாவில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதை யொட்டி டிரம்ப்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த ரசாயனத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை சிரியா அதிபர் பஷார் அல்-ஆசாத் நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

திங்களன்று வெள்ளை மாளி கையில் பேசிய அதிபர் டிரம்ப், "சிரியாவில் நடத்தப்பட்ட தாக்கு தல் காட்டுமிராண்டித்தனமானது, இனியும் அப்படியொரு தாக்குதலை அனுமதிக்க முடியாது," என்றார். "தாக்குதலை நடத்தியது ரஷ் யாவா, சிரியாவா, ஈரானா அல்லது அனைவரும் சேர்ந்தா என்பதைக் கண்டுபிடிப்போம்," என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால் இதுவரை ரசாயன தாக்குதலுக்கு ஒருவரும் பொறுப்பு ஏற்கவில்லை. "அது ஒரு கொடூரமானத் தாக்குதல், மனிதாபிமானத்திற்கு எதிரானது," என்றும் டிரம்ப் சாடி னார். இந்நிலையில் சிரியா அரசாங் கமும் அதன் நட்பு நாடான ரஷ் யாவும் தாக்குதலில் தொடர்பில்லை என்று கூறியுள்ளன.