அல்ஜியர்ஸ்: அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜியர்சிலிருந்து புறப்பட்ட ஒரு ராணுவ விமானம் நேற்று விபத்துக்குள்ளானதில் 250 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்த தாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள் ளானதாகக் கூறப்பட்டது. அல்ஜியர்ஸ் நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ள விமான நிலையத்திற்கு அருகில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் சிதறிக் கிடப்பதையும் அங்கு மீட்புக் குழுவினர் கூடியிருப்பதையும் தொலைக் காட்சி புகைப்படங்கள் காட்டின. அந்த விபத்தில் மொத்தம் 257 பேர் உயிரிழந்ததாக தொலைக்காட்சி தகவல் தெரிவித்தது. விபத்தில் இறந்தவர்களில் அல்ஜீரிய படைப் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 26 பேர் அடங்குவர் என்று ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
விமான விபத்துக்கு என்ன காரணம் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த விமானம் அல்ஜீரியாவின் எல்லைப் பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்துக் குள்ளானதாகக் கூறப்பட்டது. அந்த விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் கூறுகின்றன. விபத்தில் உயிரிழந் தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக அல்ஜீரிய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. 2014ஆம் ஆண்டு அல்ஜீரி யாவில் ஒரு விமானம் விழுந்து நொறுங்கியதில 77 பேர் உயிரிழந் தனர்.
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மீட்புக் குழுவினர் கூடியுள்ளனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அது விபத்துக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. விபத்தில் ராணுவ வீரர்கள் உட்பட 250 பேர் பலியானதாக அதிகாரிகள் கூறினர். விமானம் காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் கூறின. படம்: ஏஎஃப்பி

