தோக்கியோ: ஜப்பானில் நேற்று ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்த தாக அதிகாரிகள் கூறினர். நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறினார். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மலைப்பகுதி என்பதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளது என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். மண்ணையும் சகதியையும் அகற்றும் பணியில் மீட்புக் குழு வினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் பல வீடுகள் நாசமானதாகக் கூறப்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புக் குழுவினர் சகதியை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

