ரஷ்யத் தூதரக உதவியை மறுத்த யூலியா ஸ்கிரிபால்

ரஷ்யத் தூதரக உதவியை மறுத்த யூலியா ஸ்கிரிபால்

1 mins read

வா‌ஷிங்டன்: நச்சு ரசாயனப் பொருளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஷ்ய முன்னாள் உளவாளியின் மகளான யூலியா ஸ்கிரிபால் உடல் நிலை தேறிய பின்னர் திங்கட் கிழமை மருத்துவமனையை விட்டுச் சென்றார். ரசாயனத் தாக்குதலுக்கு இலக்கான தன் தந்தை இன்னமும் ஆபத்தான நிலை யில் இருப்பதாக 33 வயது யூலியா கூறினார். தற்சமயம் ரஷ்யத் தூதரக உதவி தேவை யில்லை என்று கூறிய யூலியா, தனக்காகவும் தன் தந்தைக்காக வும் ஆதரவாக யாரும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.