பெட்டாலிங் ஜெயா: ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில், பொந்தியான் பேரங்காடிக்கு நேற்று வருகையளிக்க விருப்பதாக செய்தி பரவியதும் அங்கு பொருட்களை இலவசமாக வாங்கலாம் என்ற எண்ணத்தில் அந்தப் பேரங்காடிக்கு பலர் விரைந்து சென்றனர். அது பொய் செய்தி என்று பல அறிவிப்பு கள் வந்தபோதிலும் நேற்று காலை அந்தப் பேரங்காடியில் திரண்ட சுமார் 1,000 பேர் பொருட்களை வாங்கிக் குவித்ததாகக் கூறப்பட்டது. நேற்று முன்தினம் தெப்ராவ் பேரங்காடியில் பலர் வாங்கிய பொருட்களுக்கு இளவரசர் பணம் செலுத்தினார்.
ஜோகூரில் பரவிய பொய் செய்தி
1 mins read

