சோல்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் வரும் மே மாதக் கடைசியில் அல்லது ஜூன் மாதத் தொடக் கத்தில் சந்தித்துப் பேசவுள்ளனர். திட்டமிடப்பட்ட அந்தப் பேச்சு வார்த்தையின் விவரங்கள் குறித்து அமெரிக்காவும் வடகொரியாவும் நேர்மையான முறையில் பேச்சு நடத்தி வருவதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். திரு டிரம்ப்பும் திரு கிம்மும் சந்தித்துப் பேசும் இடம் மற்றும் அந்த சந்திப்புக்கான ஆயத்தப் பணிகள் குறித்து இரு தரப்பும் பேச்சு நடத்தி வருவதாகவும் திரு மூன் கூறினார்.
அந்த சந்திப்புக்கான ஆயத்தப் பணிகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் நேரடியாக வடகொரிய அதிகாரி களுடன் பேச்சு நடத்தி வருவதாக திரு டிரம்ப்பும் கூறியுள்ளார். திரு டிரம்ப்பும் திரு கிம்மும் சந்தித்துப் பேசுவதால் அணுவாயுத மற்ற கொரிய தீபகற்பத்தை உரு வாக்குவதற்கான முக்கிய திருப்ப மாக அமையும் என்று தான் எதிர்பார்ப்பதாக திரு மூன் கூறினார். திரு கிம்மை சந்தித்துப் பேசுவதன் மூலம் வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்தை கைவிடச் செய்ய முடியும் என்று திரு கிம்மும் திரு டிரம்ப்பும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

