சிரியாவை நெருங்கும் அமெரிக்க, பிரிட்டிஷ் நீர்மூழ்கிக் கப்பல்கள்

சிரியாவை நெருங்கும் அமெரிக்க, பிரிட்டிஷ் நீர்மூழ்கிக் கப்பல்கள்

2 mins read

வா‌ஷிங்டன்: சிரியா அரசாங்கம் அந்நாட்டு மக்கள் மீது நடத்தி யதாகக் கூறப்படும் ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடியாக அந் நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் இரு கடற்படை நாசகாரி கப்பல் கள் டொமாஹாக் ஏவுகணை களுடன் சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக கடல் பகுதியில் தயார் நிலையில் உள்ளன. அத்துடன் அமெரிக்கா வின் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானங்களும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உத் தரவுக்காக காத்திருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். இதற்கிடையே பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேயும் சிரியா ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக பிரிட்டிஷ் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயார் நிலையில் இருக்குமாறு உத்தர விட்டுள்ளார். சிரியாவின் ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடி யாக அமெரிக்காவும் பிரான்சும் சேர்ந்து மேற்கொள்ளவிருக்கும் தாக்குதலில் பிரிட்டனும் சேர்ந்து கொள்ளுமா என்பது குறித்து திருவாட்டி மே இறுதி முடிவு எடுக்கவில்லை என்ற போதிலும் சிரியாவின் செயலுக்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் விரும்புவதாக பிரிட்டிஷ் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியாவில் உள்ள ராணுவ இலக்குகளுக்கு எதிராக நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து ஏவு கணைகளை வீசித் தாக்குவதற்கு பிரிட்டன் உதவும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத் தகவல்கள் கூறு கின்றன. முன்னதாக திரு டிரம்ப், சிரியாவை நோக்கி புதிய திறன் மிகுந்த ஏவுகணைகளை அமெரிக்கா பாய்ச்சும் என்று டுவிட்டர் பக்கத்தில் தெரிவித் திருந்தார். சிரியா விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் தலைவர்கள் உடன் பாடு காண்பதற்கு முன்னதாக திரு டிரம்ப் இவ்வாறு கூறி யிருந்தார். சிரியா மீது ராணுவ நடவடிக்கை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்கா கூறியது.