ஜோகூர்பாரு: ஜோகூர் மாநிலத் தில் உள்ள தெப்ராவ் 'AEON' பேரங்காடிக்கு புதன்கிழமை மாலை சுமார் 6.45 மணிக்கு பொருட்கள் வாங்க வந்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அங்கு திடீர் வருகை புரிந்த ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், அங்கே கூடியிருந்த மக்களிடம் " நீங்கள் ஒவ்வொரு வரும் 3,000 ரிங்கிட் வரையிலான தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் நானே பணம் செலுத்தப் போகிறேன்," என்று அறிவித்த போது அங்கு மகிழ்ச்சி ஆரவாரம் வெடித்தது. அங்கிருந்த மக்கள் பரபரப்புடன் தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு வரும் மூன்று தள்ளுவண்டிகள் நிறைய பொருட்களை எடுத்துக் குவித்தனர். கடைசியில் அவர்கள் வாங்கிய பொருட்களுக்கான கட்டணம் 1 மில்லியன் ரிங்கிட் தொகையை செலுத்திவிட்டு ஜோகூர் இளவரசர் அங்கிருந்து சென்றார்.
இளவரசர் துங்கு இஸ்மாயில் அவரது மனைவியுடன் அந்தப் பேரங்காடிக்கு வந்திருந்ததாகவும் அவர்கள் இருவரும் ஐந்து நிமிடத்திற்கு குறைவாக அந்தப் பேரங்காடியில் இருந்ததாகவும் கூறப்பட்டது. மக்களுக்கு அவர் வழங்கிய உதவியைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த மக்கள் "வாழ்க ஜோகூர் இளவரசர் என்று வாழ்த்தி ஆரவாரம் செய்தனர். மக்கள் கூட்டம் அங்கு அலை மோதியதைத் தொடர்ந்து, அந்தப் பேரங்காடியில் பாதுகாப்பு வலுப் படுத்தப்பட்டது. பணம் செலுத் தத் தேவையில்லை, இலவசமாக வாங்கலாம் என்பதால் பலர் வீட்டுக்குத் தேவையான அரிசி, சமையல் எண்ணெய், காய்கறிகள், பழங்கள் என பல வகைப் பொருட் களை வாங்கிக் குவித்தனர்.
இதனால் பெரும்பாலான பொருட்கள் தீர்ந்து விட்டதால் அந்தப் பேரங்காடியின் பல பகுதி கள் மூடப்பட்டன. காய்கறிகள் மற்றும் மீன் விற்கும் இடங்கள் மட்டுமே திறந்திருந்ததாக அன் றிரவு அங்கு சென்றிருந்தவர்கள் கூறினர். மக்களின் சிரமத்தை புரிந்துகொண்டு, ஜோகூர் அரச குடும்பம் எப்போதும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருவதாக அந்த பேரங்காடிக்கு அன்று மாலை வந்திருந்த ஒருவர் கூறினார்.
ஜோகூரில் உள்ள பேரங்காடிக்கு வந்திருந்த ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில், அந்தப் பேரங்காடிக்கு வந்திருந்த மக்கள் வாங்கிய பொருட்களுக்கான 1 மில்லியன் ரிங்கிட் கட்டணத்தை செலுத்தி மக்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

