இஸ்லாமாபாத்: குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் மேடையேறிப் பாடிய கர்ப்பிணிப் பாடகி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ் தானில் நிகழ்ந்துள்ளது. சிந்து மாநிலத்தில் உள்ள கங்கா எனும் சிற்றூரில் திருமதி சமீரா சிந்து, 28, என்ற அப்பெண் எழுந்து நின்று பாடாததால் ஆடவர் ஒருவர் அவரைச் சுட்டுக்கொன் றதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கொண்டாட்ட உற் சாகத்தில் வானை நோக்கிச் சுட்ட போது தவறுதலாக திருமதி சமீரா மீது குண்டு பாய்ந்துவிட்டது என்று அந்த ஆடவர் சொன்னதாக பிபிசி செய்தி கூறுகிறது. போலிஸ் அவரைக் கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகிறது.
பலியான திருமதி சமீராவின் கணவர் ஆஷிக் சம்மூ போலிசில் அளித்துள்ள புகாரில், "அந்த ஆடவர் தம்முடைய மனைவியை நோக்கி துப்பாக்கியைக் காட்டி, எழுந்து நின்று பாடும்படி மிரட்டல் விடுத்ததாக" குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொலையைக் கண் டித்து வீதியில் இறங்கிப் போராடிய இசைக்கலைஞர்கள், சம்பவ இடத் தில் இருந்த வேறு இரு ஆடவர் களையும் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தினர். சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், மேடையில் அமர்ந்திருக்கும் திருமதி சமீரா பின் எழுந்து நின்று பாடுவதும் சில ஆடவர்கள் அவர் மீது பணத்தை வாரி இறைப்பதும் தெரிகிறது. பிறகு துப்பாக்கியால் மும்முறை சுடும் சத்தம் கேட்கிறது. உடனே திருமதி சமீரா கீழே விழுவதையும் காணொளி காட்டு கிறது.

