இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிஃப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆட்சியாளர்கள் நேர்மையாக வும் நம்பிக்கையானவராகவும் இருக்கவேண்டும் என்பதை வலி யுறுத்தும் அரசியல் சாசனப் பிரி வின்கீழ் ஒருவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் அவர் வாழ்நாள் முழுவதும் அரசாங்கப் பொறுப்பு வகிக்கத் தடைவிதிக்கப்பட்டவர் என எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஐவர் அடங்கிய உச்ச நீதி மன்ற நீதிபதிகள் குழு தெரிவித் திருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி, உச்ச நீதிமன்றத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் நவாஸ் ஷரிஃப் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். பனாமா ஆவணங்கள் கசிந் ததை அடுத்து, நவாசும் அவரு டைய குடும்பத்தினரும் முறைகே டாகச் சேர்த்த பணத்தை வெளி நாடுகளில் முதலீடு செய்திருப்ப தாகப் புகார் எழுந்தது.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இருக்கும் தம்முடைய மகனின் நிறுவனம் மூலம் கிடைத்த ஊதி யத்தை நவாஸ் குறிப்பிடத் தவறி விட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், அந்த நிறுவனத்தில் இருந்து தாம் ஊதியம் பெற்றதே இல்லை என மறுத்த நவாஸ், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் தம் மகனின் தொழில் நீடிக்க ஏதுவாக செல்லத்தக்க வர்த்தக விசா தொடர்ந்து கிடைப்பதற்காக மட் டுமே தாம் அந்த நிறுவனத்தில் ஒரு பொறுப்பு வகித்ததாகவும் விளக்கமளித்தார்.
இருந்தாலும், அவர் ஊதியம் பெற்றாரா இல்லையா என்பது முக்கியமில்லை என்று உச்ச நீதி மன்றம் தெரிவித்துவிட்டது. மும்முறை பிரதமராக இருந்த நவாஸ் மற்றும் அவருடைய மூன்று பிள்ளைகள் மீதான ஊழல் வழக் குகள் மீதான விசாரணை தேசிய பொறுப்பாண்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வரும் வாரங்களில் அந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இவ்வாண்டு ஜூலை மாதம் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன் றத்தில் அறுதிப் பெரும்பான்மை உடன் இருக்கும் நவாசின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, "உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, ஜனநாய கத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்" என்று கருத்துரைத்து உள்ளது.

