28 வயதென பொய் சொல்லி காதலரை ஏமாற்றி மில்லியன் கணக்கில் மோசடி

28 வயதென பொய் சொல்லி காதலரை ஏமாற்றி மில்லியன் கணக்கில் மோசடி

1 mins read

பெய்ஜிங்: சீனாவில் 42 வயது மாது ஒருவர் 28 வயது பெண்ணைப்போல நடித்து ஆண் நண்பர் ஒருவரிடம் 6 மில்லியன் யுவான் ($1.2 மில்லியன்) மோசடி செய்துள்ளார். திருவாட்டி வாங் ஜிங்ஜிங் எனும் அம்மாது, அதிக அளவில் ஒப்பனை செய்தும் தனது புகைப்படத்தை செயலிகள் மூலம் மாற்றியும் அந்த ஆடவரை ஏமாற்றியதாக சினா.காம் எனும் சீன ஊடகம் தெரிவித்தது. 30 வயதான தனது காதலர் லி சியோசிங்கிடம் 2016 முதல் 2017 வரையிலான காலத்தில் அந்தப் பணத்தை அவர் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. பணத்தை முதலீடு செய்திருப்பதாகக் கூறிய அந்தப் பெண் தன் காதலருக்கு ஒரு மில்லியன் யுவான் பணத்தை லாபம் என்று திருப்பிக் கொடுத்துள்ளார். ஷென்ஸென் நகரில் இந்த மோசடிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பெண் மிதமிஞ்சிய ஒப்பனையிலும் நவநாகரிக உடையிலும் இருப்பார் என்று திரு லி கூறினார். தமது வயது 28 என்று அவர் கூறினாலும் ஆவணங்களின்படி அவர் 1976ல் பிறந்தவர். மக்காவ்வில் கடந்த ஆண்டு 6 மி. ஹாங்காங் வெள்ளியை சூதாடி இழந்ததாக அந்த மாது கூறியுள்ளார்.